தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

www.thagavalthalam.com

       தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தமிழக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து அமைச்சர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற மாநில உயர்கல்வி மன்றக் கூட்டத்தில் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், சில பல்கலைக்கழகங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

   இதைத் தொடர்ந்து பல்வேறு பல்கலைகழகங்களை சேர்ந்த மாணவர்கள் நேற்று சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் மாநில உயர்கல்வி மன்ற கூட்டத்தில் கட்டண உயர்வு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.