பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாத தாள்களை (அரியர்) எழுத மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
கடந்த ஜூன் 2001 வரை பொறியியல் பட்டத்தில் இளநிலை மற்றும் முதுநிலை (பி.இ. பி.டெக், எம்.இ, எம்.டெக், பி.ஆர்க், பி.எஸ்.சி, எம்.எஸ்.சி, எம்பிஏ, எம்சிஏ ) முழு நேரம் மற்றும் பகுதி நேர படிப்புகளில் சேர்ந்தவர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி தேர்ச்சிப்பெறாத தாள்களை எழுதி தேர்ச்சி பெறலாம்.
இவர்களுக்கான இறுதி வாய்ப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டபோதும், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த சிறப்பு இறுதி வாய்ப்பை பல்கலைக்கழகம் அளித்துள்ளது.
இந்த சிறப்பு வாய்ப்பை பயன்படுத்த விரும்புபவர்கள் மூன்று பாடங்கள் வரை ரூ. 3,000 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதன் பிறகு ஒவ்வொரு கூடுதல் பாடத்துக்கும் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும்.
சிறப்பு தேர்வுகள் வரும், 2013 நவம்பர்/டிசம்பர் மாதங்கள் மற்றும் 2014 ஏப்ரல்/மே மாதங்களில் நடைபெறுகின்றன.
மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக தேர்வுகளுக்கான கட்டுப்பாட்டாளரை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.