பள்ளியில் நடந்த கல்வி கொள்ளை குறித்து நேருக்கு நேர் செருப்பில் அடித்தது போல் மாணவர் கேட்ட கேள்விக்கு திணறிய கல்வி முதலாளிகளை காண கண்கோடி வேண்டும்.
குரங்கு தான் கெட்டதுமில்லாமல் வனத்தையும் கெடுத்தது போல் மற்ற பள்ளிகளையும் இவர்களை போன்றே மூளை அழிவுக்கு தூண்டுகின்றனர்.
நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வதுபோல், இளம் மாணவர்களின் கற்பனைத்திறன், சிந்தனைத்திறன், சமூக அக்கரை, கலைத்திறன் ஆகிய அனைத்தையும் பொசுக்கி விட்டு மேல்நாட்டு கம்பெனிகளுக்கு ஊழியர்களை உற்பத்தி செய்யும் ஆளைகலாக மாறிவிட்டன இந்த பள்ளிகள்.
நாமக்கல்லை மட்டும் சொல்வது தவறு. எல்லா மாவட்டத்திலும் இதுபோன்ற பள்ளிகள் உண்டு. நாமக்களிலும் நல்ல பள்ளிகள் உண்டு. இவர்களால் அந்த பள்ளிகளையும் பெயர் கெட்டுவிட கூடாது.
இந்த நிகழ்ச்சியில் ஒரு முக்கிய பிரச்சனையை யாரும் சொல்லவில்லை. இந்த கல்வி மாபியாக்களின் கொடுமை தாங்காமல் விடுதிகளில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் ஏராளம். இதனாலே சில பள்ளிகளில் அரைஞான் கிறுக்கு தடை உண்டு.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தப்பித்துகொண்ட அந்தியூர், உடுமலைபேட்டை, சிவகாசி, விருதுநகர் குரூப்களின் அறிவை பாராட்டலாம்.
-இணைய செய்தியாளர் - செவ்வல் குமரன்