மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு
ஆணையத்தின் சார்பாக மூன்று நாள் கணினி தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும் ஜனவரி 6, 19 மற்றும் 20-ம் தேதிகளில் இந்த பயிற்சி
வழங்கப்படுகிறது. பயிற்சியானது கோலஸ்ஸி டெக்னாலஜிஸ், எண்: 1, அண்ணா சாலை,
சின்னமலை, சென்னை - 600 015 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
இளநிலை பட்டதாரிகள், நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் கணினியின்
எக்ஸல் மென்பொருள் பயன்படுத்த தெரிந்தவர்கள் மட்டுமே இதில் பங்கு பெற
முடியும். பயிற்சிக் கட்டணமாக 6,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு
பயிற்சிக் கட்டணத்தில் இருந்து 50 சதவிகிதம் விலக்கு அளிக்கப்படுகிறது.
பயிற்சிக் கட்டணத்தை The Director, MSME DI,PD A/C என்ற பெயரில் வரைவோலை
எடுக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு B.பாக்கிய ராஜன், துணை இயக்குநர் - தொழிற்கூட
மேலாண்மை, அறை எண்: 14, முதல் தளம், MSME-DI, கிண்டி, சென்னை என்ற முகவரியை
அணுகலாம். மேலும் 89395 75857 அல்லது 81482 75406 ஆகிய தொலைபேசி எண்களை
தொடர்பு கொள்ளலாம்.
-பசுமை நாயகன்