ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் இருந்து முதன்முறையாக பெண் ஒருவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது காஷ்மீர் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ருவைதா சலாம் என்ற அந்த பெண், குப்வாரா என்ற இரு நாட்டு எல்லைகளுக்கு இடையேயான மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். தன்னுடைய வாழ்நாள் முழுதும் குண்டு வீச்சுகளையும் தொடர் தாக்குதலையும் பார்த்தே வளர்ந்த ருவியாடா சலாம், கடந்த 2009ஆம் ஆண்டு KAS எனப்படும் காஷ்மீர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் அதிகாரியாக பதவியேற்றார்.
இந்நிலையில் அவரது குடும்பத்தினர் அளித்த ஊக்கத்தினால், தற்போது ஐஏஎஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு ஷா ஃபெய்சல் என்பவர் முதன்முதலில் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.